internet

img

வைஃபை பாஸ்வோர்ட் மறந்துவிட்டால், கண்டுபிடிப்பது எப்படி?

வைஃபை பாஸ்வோர்டை மறந்துவிட்டால், வைஃபை ரவுட்டரை ரீசெட் செய்யாமல் பாஸ்வோர்டை கண்டறிய எளிய வழிமுறை இருக்கிறது.

பாஸ்வோர்டை கண்டறிய பல்வேறு வழிகள் இருக்கின்றன. விண்டோஸ் அல்லது மேக் என எந்த சாதனத்தை பயன்படுத்தினாலும், ரவுட்டரின் செட்டிங்ஸ் பக்கம் செல்ல வேண்டும். இவ்வாறு செய்ய ஏதேனும் ஒரு சாதனத்தில் வைஃபை ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒருவேளை வைஃபை நெட்வொர்க்கில் இணைக்கப்படாமல் இருந்தால் ரவுட்டரில் இருக்கும் WPS புஷ் பட்டனை கிளிக் செய்தோ அல்லது ஈத்தர்நெட் கேபிள் மூலம் இணைப்பை பயன்படுத்தி ரவுட்டரின் செட்டிங்ஸ் பக்கத்தை திறக்கலாம்.

விண்டோஸ் அல்லது மேக் சாதனத்துடன் வைஃபை இணைக்கப்பட்டிருந்தால் டாஸ்க்பாரில் இருக்கும் விண்டோஸ் வைஃபை ஆப்ஷனை ரைட் கிளிக் செய்ய வேண்டும். அதில் உள்ள Open Network and Sharing center ஆப்ஷனை கிளிக் செய்து, Change adapter settings ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதை அடுத்து வைஃபை ஆப்ஷனை இருமுறை கிளிக் (டபுள் கிளிக்) செய்ய வேண்டும். பின்னர், வைஃபை ஸ்டேட்டஸ் பக்கத்தில், Wireless Properties ஆப்ஷனை கிளிக் செய்து செக்யூரிட்டி ஆப்ஷனில் ஷோ பாஸ்வோர்டு (Show password) மூலம் பாஸ்வோர்டை கண்டறியலாம்.

மேலும், மேக் சாதனத்தில், வைஃபை ஐகானை கிளிக் செய்து, Open Network Preference ஆப்ஷனக்கு சென்று ஷோ பாஸ்வோர்ட் (Show password) ஆப்ஷனை மூலம் பாஸ்வோர்டை கண்டறிய முடியும்.

இரண்டாவதாக, சாதனத்தில் வைஃபை இணைக்கப்படாமல் இருக்கும் நிலையில், ஈத்தர்நெட் கேபிள் பயன்படுத்தி விண்டோஸ் கம்ப்யூட்டரில் RJ45 கேபிளை இணைத்து ரவுட்டரின் கான்ஃபிகரேஷன் பக்கத்தை திறந்து login விவரங்களை பதிவிட வேண்டும். login செய்ததும் வைஃபை ஆப்ஷனை கிளிக் செய்து பாஸ்வோர்ட் அல்லது செக்யூரிட்டி ஆப்ஷனை கிளிக் செய்து, ஷோ பாஸ்வோர்ட் (Show password) மூலம் வைஃபை பாஸ்வோர்டை கண்டறியலாம்.


;